முக்கியச் செய்திகள் மழை

குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி

தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி.

சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீரானது குளம்போல தேங்கியுள்ளது. குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது, பெய்து வரும் மழையின் காரணமாக இந்த பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குட்டித் தீவு போல காட்சி அளிக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை பூட்டிவிட்டு சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் அக்கம்பக்கத்தில் இருக்கும் வீட்டிற்கும் சென்று விட்டதாக கூறுகின்றனர்.
இந்தப் பகுதியில் பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு கருதி ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டால் தொலைபேசி எடுப்பதே இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், இந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்திருந்த போதும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாததால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக விரைவாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்த பகுதியில் இதுபோன்ற இனிவரும் காலங்களில் மழை நீரால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Halley Karthik

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan