வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன முதல் அதி கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், காமராஜர் சாலை, அண்ணாசாலை, மெரினா, கோபாலபுரம், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், நந்தனம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் போன்ற சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில சமயங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது.







