சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஸ்டேன் சுவாமி மரணத்தில் மனித உரிமை மீறல், பொய் வழக்கு புனைதல் நடைபெற்றுள்ளதாக கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்டேன் சுவாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.