முக்கியச் செய்திகள் உலகம்

மக்களின் வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்த பைடன் நிர்வாகம் முடிவு!

அமெரிக்காவில் மக்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜோ பைடன் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 67 சதவீதத்தினர் மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் அதிகப்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். தான் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு 30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை 16 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளனர். 16 கோடி என்ற இலக்கை இந்த வார இறுதிக்குள் எட்டுவோம் என தெரிவித்த அவர், அதற்காக ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் தனது நிர்வாகம் ஈடுபடும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மனைவியை கொல்ல முயன்ற கணவனை கல்லால் அடித்த பொதுமக்கள்!

Gayathri Venkatesan

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி!

Halley karthi

தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமித்தது ஏன் – உயர்நீதிமன்ற கிளை கேள்வி

Jeba Arul Robinson