யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில், வீழ்த்திய இத்தாலி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
யூரோ கால்பந்து தொடர், விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்பெயின் – இத்தாலி அணிகள் மோதின. தொடக்கம் முதலே, கோல் போட முயன்ற இரு அணிகளின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், எந்த அணியும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதியில், 59 வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெடரிகோ சிஸ்சா முதல் கோலை பதிவு செய்தார். இதனையடுத்து தாக்குதல் ஆட்டம் ஆடிய ஸ்பெயின் அணியின் அல்வரோ மொராட்டா 79 வது நிமிடத்தில்,கோல் அடித்தார்.
இதனால், 1 -க்கு 1 என போட்டி சமன் ஆனது. கூடுதல் நேரத்தின் 110வது நிமிடத்தில் இத்தாலியின் பெரார்டி கோல் அடித்த போதும், அது ஆப்சைட் என அறிவிக்கப்பட, போட்டி பெனால்டி சூட் அவுட் முறைக்கு சென்றது. இதனைத்தொடர்ந்து 4 – 2 என்ற கோல் கணக்கில் வென்ற இத்தாலி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதுகின்றன.