புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக…

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த
போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றி
அவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவு கூறும் வகையில் உலகப்
பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி இன்று மாலை நடைபெறுகிறது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் வைக்கப்பட்ட மாதா சுருபத்தை
தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் புனிதம் செய்து வைத்தார். அதனை
தொடர்ந்து மைக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா, 6
தேர்களில் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் ஆரோக்கிய மாதா
எழுந்தருளிய பெரிய தேரினை தோள்களில் சுமந்து செல்ல உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கும் பெரிய தேர்பவனி கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு, உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடையும். தேர் பவனியை காண வெளிநாடு மற்றும், இந்தியாவில் உள்ள மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை காலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் வேளாங்கன்னி மாதா திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக
குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.