சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். லிப்ரா புரோடக்சன்ஸ் எனும் பெயரில் படம் தயாரித்து வருகிறார். ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமியை திருமணம் செய்ததில் இருந்து மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்.







