கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்களும் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருவிழா குறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கை அதிகாரிகள், இந்தியாவிற்கான இலங்கை தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், 5 ஆயிரம் தமிழர்களை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்பாணம் மாவட்டம், நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.