ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் மற்றும் தென்னை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பெருமளவு தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.

பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் தற்போது வெறும் ஏழு ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதனால் தேங்காய்கள் அறுவடை செய்யாமல் மரத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது “வெளி மாநிலங்களில் தேங்காய் தேக்கத்தின் காரணமாக இங்கு தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்”.

இது ஒருபுறம் இருக்க கொப்பரை தேங்காயும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கிலோ 100 ரூபாய் வரை எடுக்கப்பட்ட கொப்பரை தேங்காய் தற்போது 70 ரூபாய்க்கு மட்டுமே தனியாரிடம் விற்பனை செய்யப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு தேங்காய் வீழ்ச்சிக்கான காரணத்தை குறித்து ஆராய்ந்து தேங்காயை நல்ல விலைக்கு எடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.