அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அரியலுார் அருகே உள்ள கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இத்திருவிழாக்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
—-அனகா காளமேகன்







