இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6,155 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இந்தியாவின் மொத்த பாதிப்பு 4 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 31,194 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதுவகை உருமாறிய கொரேனா தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. 38 சதவீதம் பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.