சிறுவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீபச்சையம்மன் கோயிலில் 10 ஆம் ஆண்டு தீமிதி விழாவானது நடைபெற்றது.
முன்னதாக அஞ்சாத்தம்மன் மற்றும் பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கிராம மக்கள் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தீ மிதி விழாவை ஒட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டியை கைகளில் ஏந்தியும் கரகம் தலையில் சுமந்தும் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.
மேலும் தீமிதி விழாவில் இலவம்பேடு, மேட்டுப்பாளையம், வண்ணிப்பாக்கம், மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பச்சையம்மனை தரிசனம் செய்தனர். தீ மிதி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
–ரூபி.காமராஜ்







