கரூர் அருகே பெரிய சேங்கல் கிராமத்தில் பங்காளிகள் ஒன்று கூடி நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு மற்றும் சாட்டையடி வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கலுள்ள காமாட்சியம்மன், பச்சமலையாச்சி அம்மன், கருப்பணசாமி, மதுரை வீரன் உள்ளிட்ட கோயிலில் அப்பகுதி பங்காளிகள் ஒன்று கூடி திருவிழா நடைபெற்றது. இதில் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது.
இதில் பெண்கள், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அப்பகுதியுள்ள ஆண்கள்,பெண்களை அமரவைத்து கோவில் பூசாரியால் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. சாட்டையால் அடித்தால் காற்று, கருப்பு, ஏவல் நீங்கும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர் பங்காளிகள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர்.
அனகா காளமேகன்






