கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில்…

ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில் கண்ணனூர்
மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 15 நாட்களாக
நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் உச்ச விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் தாரமங்கலம் வட்டாரத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

இந்நிலையில்,  விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தீ மிதி விழாவில் கலந்துகொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். இதில், சுமார் 10,000 பேர் தீ மிதித்து அம்மனை வழிபாடு செய்தனர். திருவிழாவை தொடர்ந்து சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.