பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்!

நீலகிரி மாவட்டத்தில், உலக பூர்வீககுடிகளின் சர்வதேச தின விழாவை கொண்டாடும் வகையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தோடர் பழங்குடியினர் பெண்களுடன் நடனமாடி மகிழ்ந்தார். நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர்,…

நீலகிரி மாவட்டத்தில், உலக பூர்வீககுடிகளின் சர்வதேச தின விழாவை
கொண்டாடும் வகையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தோடர் பழங்குடியினர் பெண்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர், பனியர்
போன்ற 6 வீதமான சுமார் 31 ஆயிரம் பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர்
மக்களால் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகைக்கு வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ், தோடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் முத்துநாடு மந்து
கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பழங்குடியினர் மக்களை நேரில் சந்தித்து
வாழ்த்து தெரிவித்ததுடன், பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய உடையுடன்
நடனமாடினார்.

மேலும், அமைச்சர் அப்பகுதி மக்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தோடர் பழங்குடியினர் மக்களின் பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் , கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிர்த்தனா உட்பட, ஏராளமான பழங்குடியினர்கள் பங்கேற்றனர். பழங்குடியினர் மக்களுடன் அமைச்சர் நடனமாடியது, பழங்குடியினர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.