சேரன்மகாதேவியில் மழை வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம் நடை பெற்றது மிளகு அபிஷேகம் செய்து தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வழிபாடு செய்தனர்.
நெல்லை, அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன.
மேலும், இந்த அனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளில்
போதிய நீர்இருப்பு இல்லாமல் உள்ளது. இந்த காரணத்தினால் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
வழக்கமாக ஜூன் மாதம் 01ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் தற்போது வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் இந்த கண்ணடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து நெல்லை வரை சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் சுமார் ஒரு மாத காலம் ஆகியும் தற்போது வரை கோடை மழை பெய்யாததாலும், பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படாததாலும், விவசாயிகள் ஒன்றிணைந்து மழை வேண்டி இன்று மிளகு விநாயகருக்கு கணபதி ஹோமம் நடத்தினர்.
பின்னர் மிளகு விநாயகர் சிலைக்கு மிளகு சாத்தப்பட்டு பிள்ளையாருக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காட்டி பின் சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால்வாயிலில் தண்ணீரை வடியவிட்டனர். இந்த சிறப்பு பூஜையில் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான
விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ம. ஶ்ரீ மரகதம்







