முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி திட்டம்: முதல்வர்!

சென்னை தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என, அங்கிருந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

Ezhilarasan

‘சலார்’ படத்தில் ’ராஜமன்னார்’ஆகும் ஜெகபதி பாபு: கேரக்டர் லுக் வெளியீடு

Gayathri Venkatesan

கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை!

Saravana