சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்கையை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “பள்ளிச்சீருடை, கல்வி உபகரணங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளேன். நான்கு லட்சம் மாணவர்கள் இலக்கு வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தனியார் பள்ளிக்கும் அரசு, பள்ளிக்கும் பெரும் வாரியாக மாணவர் சேர்க்கை குறையவில்லை. நான் முதலில் கையெழுத்து போட்டது பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தான். அரசின் சிறப்பு சலுகைகள் 100 சதவீதம் சென்றடைய நடவடிக்கை எடுப்போம். தமிழகத்திற்கு தேவையான முக்கியத்துவம் மோடியிடம் முன் வைத்துள்ளோம்.
நீட் தேர்வு குறித்து சட்டரீதியாக எதிர்கொள்வோம், சில பிரச்சனைகளை சட்டமன்றத்தோடு போராடுவோம். காலி பணியிடங்கள் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் நிலுவையில் உள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மூலம் கோரிக்கை வைக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் மூலம் கோரிக்கை வைக்கப்படுகிறது. முறையான காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும். பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஏற்பட்டால் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.







