சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வருவதாக #BCAS அறிவிப்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள்…

Special flight offer for Sabarimala pilgrims - #BCAS notification with immediate effect!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட தமிழ் மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை நோக்கி புனித பயணம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில், இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக தற்போது புதிய நடைமுறையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தேங்காய் சரக்கு பட்டியலில் இடம் பெறும் என்பதால் அதனை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது அதில் தேங்காய் இருக்கும் என்பதால் விமானத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி எடுத்து செல்ல அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.