26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் செய்திகள்

விண்வெளி பயணம்: சூடு பிடிக்கும் காஸ்ட்லி டூர்

நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி எடுத்து வைத்தபோது, ஜெஃப் பெஸோசுக்கு வயது 5. அது 1969 ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நடந்த சரித்திரம். அந்தக் காட்சியை பார்த்தபோது ஏற்பட்ட விண்வெளி கனவை மிகச்சரியாக 52 வருடங்களுக்குப் பிறகு நிறைவேற்றி இருக்கிறார், உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் அதிபரான ஜெஃப் பெஸோஸ்.

’விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க ஆசைப்படுகிறேன். அது வாழ்நாள் முழுவதும் நான் வேண்டி விரும்பிய விஷயம்’ என்று கூறியிருந்தார் ஜெஃப். இது காஸ்ட்லி கனவுதான். அவரைப் போன்ற பணக்காரர்கள் இதுபோன்ற கனவுகளை காண்பதில் தவறில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதாரண மனிதனுக்கு விமானப் பயணமே அளவில்லா ஆச்சரியத்தை தரும் நிலையில், விண்வெளிப் பயணத்தை யோசிக்கவே முடியாது. அந்த நினைத்துப் பார்க்க முடியாத விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு ஜெஃப் பெஸோஸ் உருவாக்கிய நிறுவனம் புளூ ஆரிஜின். இதில் ஜெஃப்புடன் அவர் சகோதரர் மார்க், அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளர் 82 வயது வாலி பங்க் (Wally Funk) ஆலிவர் டேமன் (Oliver Daemen) என்ற 18 வாலிபர் பயணித்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

இதில் வாலி பங்க், 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி பயிற்சியை முடித்தவர். ஆலிவர் டேமன், இந்த விண்கலத்தின் ஓர் இருக்கையை 28 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.205 கோடி) ஏலத்தில் எடுத்த தொழிலதிபர் ஜோஸ் டேமனின் மகன்.

பூமியில் இருந்து 66 மைல் (106 கி.மீ) உயரம் சென்ற இவர்கள், விண்வெளியில் செலவழித்த மொத்த நிமிடம் நான்கு. பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கும் கார்மன் கோட்டிற்கு மேல் அவர்கள் செலவழித்த அந்த நான்கு நிமிடமும் எடையற்ற தன்மையை உணர்ந்திருக் கிறார்கள். அதாவது புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை அனுபவித்தி ருக்கிறார்கள். அது, இதுவரை உணராத பரவசம். அதோடு விண்வெளியில் இருந்து பூமியை பார்த்த புதுவித அனுபவம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் விண்வெளி சென்ற உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் யூனிட்டி ராக்கெட், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்து சென்றது. அதை இன்னும் கொஞ்சம் தாண்டி இருக்கிறது ஜெஃப்பின் புளு
ஆரிஜின்.

விண்வெளிக்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் சென்றிருக்கிறார்கள். விண்வெளி வீரர்கள் அல்லாதவர்களும் பணம் கொடுத்துப் பயணித்திருக்கிறார்கள். இப்போது பிரான்சன், தனது விர்ஜின் கேலக்டிக் மூலம் விண்வெளி பயணத்தை சில நாட்களுக்கு முன்
ஆரம்பித்து வைத்துவிட்டார்.

முதன்முதலாக அந்த கனவு பயணத்தை ஆரம்பித்து வைத்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார், அவர். பிரான்சனுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா உட்பட 6 பேர் இந்த விண்வெளி பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.

பிரான்சனை தொடர்ந்து ஜெஃப் பெஸோஸின் புளு ஆரிஜின், பூமியின் வளிமண்ட லத்தைத் தாண்டியிருக்கிறது. புளு ஆரிஜின் தயாரிப்பிலும் இந்தியாவின் மும்பையை சேர்ந்த பெண் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து காத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்! 2022 ஆம் ஆண்டில், விண்வெளிச் சுற்றுலா செல்வதற்காக பிரான்சனின் நிறுவனத்திடம் 500-க்கும் மேற்பட்டோர் பெருந்தொகை கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் சில விண்வெளி டூர் நிறுவனங்கள் அடுத்தடுத்த காலங்களில் தொடங்கப்படும். அப்போது இந்த காஸ்ட்லி கனவு இன்னும் எளிமையாக்கப்படலாம்.

-ஏக்ஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஆதார் -மின்கட்டண இணைப்பு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

G SaravanaKumar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

G SaravanaKumar

கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு!

EZHILARASAN D