ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்

மியான்மரின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடத்த ராணுவ சதியையடுத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ராணுவம் கைது செய்தது. வீட்டு சிறையிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் ராணுவ ஆட்சியின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு மியான்மர் வீரர்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டனர்.

ராணுவத்தின் கீழ் இந்த தேர்வு கூடாது என அந்நாட்டின் நட்சத்திர நீச்சல் வீரரான வின் ஹெட் ஓ, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் 10ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரின் ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். நடுநிலைக்கு பின்னால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒளிந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த கடிதத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது மியான்மர் ஒலிம்பிக் கமிட்டி மூலம் சர்வதேச ஒலிம்பிக்கிற்கு செல்லும் குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வின் ஹெட் ஓ 50, 100, 200 மீட்டர்களில் சிறந்த வீரராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை:10-ம் கட்டப் பேச்சுவார்த்தை

Niruban Chakkaaravarthi

சிறப்பு ரயில்கள் ரத்து!

Halley karthi

ஜம்மு விமானப்படைதளத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்: 2 வீரர்கள் காயம்

Halley karthi