முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

எனினும், திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த விவகாரம் குறித்து, தனியார் ஆய்வகத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதாகவும் அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!

Karthick

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Saravana

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

Nandhakumar