ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.