நீலகிரியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன மருத்துவமனையை பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தேசிய அளவில் சிறந்த தரமான ICU பராமரிப்பு வழங்குநரான CIPACA தற்போது உதகையில் உள்ள BS மருத்துவமனையுடன் இணைந்து ICU Care 24 மணி நேர அவசர சேவையை உதகையில் தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
BS மருத்துவமனையில் CIPACA இன் ICU செயல்பாடுகள் குறித்தும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜா அமர்நாத், மண்டல மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசுவதி, CIPACA மற்றும் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ICU Care 24 மணிநேர சேவை தொடங்கப்பட்டது.
மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.