தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 30 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை அமைச்சர்கள்…

தமிழ்நாட்டில் 30 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடற்பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் 70 இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், 30 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.