31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் விக்ரமன் மகன்

கே.எஸ்.ரவிக்குமார் அறிமுகப்படுத்தும் விஜய் கனிஷ்காவின் முதல் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழ்திரைப்பட உலகில் பல ஹிட் படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார். தற்போது அவர் பிக் பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். அதனை அடுத்து இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதாக கே.எஸ்.ரவிக்குமார் முன்னதாக அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் ஆர்.பி‌.சௌத்ரி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய இயக்குனர் விக்ரமன், எனது முதல் படம் புது வசந்தம் பூஜையின் போது அவ்வளவு படபடப்பு இல்லை. இப்போது எனது மகன் நடிக்கும் படம் என்பதால் மிகவும் படபடப்பாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பே என் மகன் நாயகனாக நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது அது முடியவில்லை.கே.எஸ்.ரவிக்குமாருக்கு” என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பேசிய அறிமுக நடிகரான விஜய் கனிஷ்கா, “இது மிகவும் மகிழ்ச்சியான நாள். எனது வெற்றிக்காக இந்த இரண்டு இயக்குனர்களும் கடுமையாக உழைக்கின்றனர். சக மனிதரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து உள்ளார். இயக்குனர் ரவிக்குமாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.அவர் இல்லாமல் நான் இல்லை” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading