கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் ராகவா லாரன்ஸும் அவர் சகோதரர் எல்வினும் இணைந்து நடிக்க உள்ளனர்.
ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து அவர் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை, பல படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரிக்கிறார். இதை கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸுடன் அவர் தம்பி எல்வினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் இதுவரை ஏற்றிராத சிறப்பு கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். எல்வின் ஹீரோவாக நடிக்கிறார்.
அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் நிறைந்த இந்த படத்திற்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.








