தமிழகம் செய்திகள்

இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

சிவகங்கை மாவட்டம்,  தனியார் நிதி நிறுவன ஊழியரின் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த நல்ல பாம்பை சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் சிவகங்கை
தெப்பகுளம் எதிரே செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து
வருகிறார்.

இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கையில் உள்ள
தான் வேலை செய்யும் நிதி நிறுவனத்திற்கு சென்று உள்ளார். அதன் வாசலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள அலுவலகம் சென்று
வேலை பார்த்து உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவர்
நிறுத்தி சென்ற இரு சக்கர வாகனத்தில் பாம்பு இருப்பது போல் தான் பார்த்ததாக
அங்கு இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, சந்தேகமடைந்தவர்கள்
ராமதாசிடம் தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக தீயணைப்பு
துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விவரம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி
நேரமாக போராடி அந்த பாம்பை மீட்டதில் அது நல்ல பாம்பு குட்டி என தெரியவந்தது.
எனவே அதனை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

—–ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேலூரில் கோடை வெயிலுக்கு பூ வியாபாரி உயிரிழப்பு…!

Jeni

அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?

Web Editor

மது ஒழிப்பில் திமுக, அதிமுக தோல்வி- அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar