ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வந்தது.
இந்நிலையில், திடீரென கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி ஏற்பட்டது
—ம. ஸ்ரீ மரகதம்







