விரக்தியில் பேட்டை தூக்கி எறிந்த குஜராத் அணி வீரர்.. காரணம் என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி நடுவரால் குற்றம் சாட்டப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி நடுவரால் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான 34 வயது மாத்யூ வேட், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரித்திமான் சாஹா 31 ரன்களிலும், சுப்மன் கில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, மாத்யூ வேட் களமிறங்கினார். அவருடன் கேப்டன் ஹார்திக் பாண்டிய பார்ட்னர்ஷிப் கொடுத்தார். 6வது ஓவரின் 2வது பந்தை மேக்ஸ்வெல் வீசினார். அந்தப் பந்தை மேத்யூ வேட் காலால் தடுத்தார். அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டது போன்று தெரிந்தது. எனினும், நடுவர் அவுட் என அறிவித்தார்.

 பின்னர் விஷுவலில் பார்த்தபோது பந்து லேசாக பேட்டியில் பட்டுச் சென்றது போல் இருந்தது. இதனால் விரக்தி அடைந்த மாத்யூ வேட், மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். அத்துடன், டிரெஸ்ஸிங் ரூமில் பேட்டையும் ஹெல்மட்டையும் தூக்கி எறிந்தார். ஐபிஎல் மீடியா அட்வைசரி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், மாத்யூ வேட் நடத்தை விதிகளை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர், ஐபிஎல் நடத்தை விதி 2.5 இன் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் விரக்தியில் பேட்டையும், ஹெல்மட்டையும் தூக்கி எறியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.