நான்காவது டி 20 ; டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு….!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது டி 20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி 20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.