மத்திய அரசிடம் சில சாலைகளை ஒப்படைக்க உள்ளோம் – அமைச்சர்

மாநில அரசிடம் நிதிப்பற்றாக்குறை இருப்பதால் சில சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.   திருச்செந்தூரில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு…

மாநில அரசிடம் நிதிப்பற்றாக்குறை இருப்பதால் சில சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

திருச்செந்தூரில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறினார். இதனால் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தூத்துக்குடி சாலையிலிருந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் வள்ளி குகை வரை புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றார்.

அய்யாவழி கோவிலிருந்து கன்னியாகுமரி சாலை வரை புறவழி சாலை அமைப்பதற்கும் முழுமையான திட்டம் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில சாலையாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

 

மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்கியுள்ளது. சாலைப்பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, மாநில சாலைகளை தேசிய சாலையாக மாற்றுவதற்கு மாநில அரசுகள் விரும்பவில்லை என விளக்கமளித்தார்.

 

மாநில அரசிடம் நிதிப்பற்றாக்குறை இருப்பதால் சில சாலைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். திருச்செந்தூர் வள்ளியூர் சாலை உட்பட 8 சாலைகள் தேசிய சாலைகளாக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.