முக்கியச் செய்திகள் இந்தியா

நீட் விலக்கு; குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மதுரை பாலரெங்காபுரம் தனியார் பள்ளியில் மதுரை மாநகராட்சி சார்பில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த மருத்துவ முகாமினை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் அரசியல் சாசனத்தை ஓங்கி முழங்கி இருப்பதாக” தெரிவித்தார். மேலும், இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை உள்ளடக்கியது என்பதை இந்த தீர்ப்புகள் சூட்டி காட்டுகிறது எனவும், மாநில உரிமைகள் மீது ஒன்றிய அரசு மிக கொடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்பாக உள்ளது என தெரிவித்தார். ஆளுநர் அமைச்சரவை முடிவு, சட்டமன்ற முடிவுக்கு கட்டுபட்டவர் என தெரிவித்த அவர், சட்டமன்ற முடிவை பரிசீலனை செய்வது, காலம் தாழ்த்துவது போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம் – வைகோ கண்டனம்’

மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், பிரதமரின் ஜப்பான் பயணத்தால் மதுரை எய்ம்ஸ் பணிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், ஒன்றிய அரசின் ஆட்சி மன்றக் குழு மதுரைக்கு ஆய்வுக்கு வந்துள்ளது, ஒன்றிய அரசின் ஆட்சி மன்றக் குழு தமிழகத்திற்கு ஆய்வு வர உரிமையில்லை என தெரிவித்தார். 1976 ஆம் சட்டத்தின் படி தமிழகத்திற்கு இந்தி ஆட்சி மொழி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்ட அவர், ஆட்சி மொழி அமலாக்கத்திற்கு ஆட்சி மன்றக் குழு ஆய்வுக்கு வர தேவையில்லை எனவும் தமிழகத்தில் இக்குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

Jayapriya

அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!

Vandhana

இலங்கை தேடி உதவி – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்

EZHILARASAN D