இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒன்றிய அரசின் அனுமதியுடன் அந்நாட்டிற்கு நிவாரணப் பொருட்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் இருந்து உயர் ரக பொன்னி அரிசிய கிலோ 33 ரூபாய் 50 காசுக்கு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘‘திராவிட மாடல்’ மணற் சிற்பம் உருவான விதம்; பத்திரிக்கையாளர் கோவி லெனின் நெகிழ்ச்சி’
எனவே, இந்திய உணவுக் கழக அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்யவுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது என கூறியுள்ள அவர், மேலும், இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








