தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீரை திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

இந்த நிலையில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அணைகளில் இருக்கும் நீரின் இருப்பு தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை மற்றும் அங்கிருக்க கூடிய சீதோஷ்ண நிலை குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3500 கன அடி வீதம் நீரை கர்நாடகம் திறக்க உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு , காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.