முக்கியச் செய்திகள் இந்தியா

ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? என எம்பி கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு தற்போது, சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும். இந்நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஒன்றை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அதில், ‘மத்திய அரசு அலுவலகங்களின் ரிஜிஸ்டர் மற்றும் பைல்களில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும்’ என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.

ஜிம்பர் இயக்குநரின் இந்த உத்தரவு தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. மேலும், இணையத்தில் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும் இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘‘திராவிட மாடல்’ மணற் சிற்பம் உருவான விதம்; பத்திரிக்கையாளர் கோவி லெனின் நெகிழ்ச்சி’ 

இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Halley Karthik

தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

Ezhilarasan

சென்னை ஐஐடியில் மாணவர் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!

Vandhana