முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு

சென்னை அமைந்தகரையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்ததோடு பல மாதங்களாக உற வினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அவர் சகோதரர் மகேஷ், ரமேஷை பார்க்க சென்றபோது, அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரமேஷ் எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததார். அது ரமேஷின் எலும்புக்கூடு என தெரியவந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து, எலும்புக்கூடை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும் ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைது

Nandhakumar

நாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது

Gayathri Venkatesan

நம்ம சத்தம்: வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Yuthi