19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளை, ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







