முக்கியச் செய்திகள் விளையாட்டு

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் ஆடவர் ஹாக்கியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய ஹாக்கி அணி மீண்டெழுந்திருக்கிறது.

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான ஜெர்மனியை எதிர்கொண்டது இந்தியா. ஜெர்மனியை எதிர்கொண்டு பதக்கம் வெல்லும் வாய்ப்பு என்பது அசாதாரணம் தான். ஆனாலும் இந்திய வீர்ர்கள் துணிச்சலோடும் வேட்கையோடும் களத்தில் இறங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரு அணிகளும் மாறி மாறி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்கள் ஜெர்மனிக்கு சற்றும் குறைவில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து, விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஜெர்மனிக்கு கடைசியாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அற்புதமாக இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுத்து நிறுத்தியது பார்ப்போரை வியக்க வைத்திருந்தது. இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய கோல் கீப்பரோ, கோல் போஸ்ட்டின் மீதே ஏறி அமர்ந்து தனது மகிழ்ச்சியையும், வலிமையையும் பறைசாற்றினார்.

கடைசியாக 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றிருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஆனால் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணி மீண்டும் பதக்கத்தை வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தியாவின் இந்த வெற்றி ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்தியா பதக்கம் வென்ற இந்த நாள், ஒவ்வோர் இந்தியனின் நினைவிலும் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றியால் ஒட்டுமொத்த தேசமே பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதே போல், இந்திய ஹாக்கி வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும், மற்ற விளையாட்டு வீரர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள் என ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால் “இந்தியாவில் ஹாக்கி மறுபிறவி எடுத்துள்ளது

 

கட்டுரையாளர்: தேவேந்திரன் பழனிசாமி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

Jeba Arul Robinson