நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான படம் மாவீரன். இந்த படம் ரசிகர்களிடையே மற்றும் குடும்பங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை பெற்றது.
இந்த வரிசையில் வெளியாக உள்ள படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1706199787396300919







