சிவகங்கை நரியனேந்தல் கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தையா சாமி கோயில் திருவிழாவிற்கு மத வேறுபாடின்றி கோலாகலமாக தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் நரியனேந்தல் கிராமத்தில் உள்ள முத்தையா சாமி கோயில் திருவிழா முன்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவதால் கோயிலின் வரிதாரர்களான பெருமாள்பட்டி, இலுப்பைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பங்காளிகள் அனைவரும் திருவிழாவிற்காக பங்கேற்றனர்.
கடந்த காலங்களில் மாட்டு வண்டி பூட்டி திருவிழா பார்க்க வந்த மக்கள் தற்போது
மினி வாகனங்களில் வருகின்றனர்.மேலும் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் அனைவரும் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து சாமியை தரிசிக்கின்றனர்.
இந்த விழாவின் இறுதி நாளில் நடைபெறும் கிடா வெட்டுதான் மிகுந்த பிரசித்தி பெற்றதாகும். 700 கிடாக்கள் வெட்டப்பட்டு நேர்த்திகடன் செலுத்தப்பட்டு பக்தர்களுக்கு படைக்கப்பட்டது. திருவிழாவை கொண்டாட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அனைவரும் வந்திருந்தனர்.
வேந்தன்








