கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு தடைவிதித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை அரசும் இந்திய பயணிகள் வர தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேரடியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கூறியுள்ள விமான போக்குவரத்து ஆணையம், மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளது.







