முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் விலைமதிப்பற்றவர்கள்: மருத்துவர் பிரப்தீப் கவுர்

இந்த கொரோனா காலகட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் விலைமதிப் பற்றவர்களாக இருக்கிறார்கள்என்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர் பிரப்தீப் கவுர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியா வில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், கொரோ னா காலகட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் விலைமதிப்பற்றவர்களாக இருக்கி றார்கள் என்று மருத்துவர் பிரப்தீப் கவுர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர், சமூக வலை தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா 2 வது அலை வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில் மருத்துவமனை படுக்கை வசதிகள் பற்றி அதிகம் கேள்விபட்டுக் கொண்டிருக்கிறோம். படுக்கைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்காது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மருத்துமனைகள் சரியாக செயல்பட, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், திறமையான விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தேவை. மேலும் தகுதிக்குரிய ஊதியத்தை சரியான நேரத்தில் செலுத்துதல் தேவை.

இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் விலை மதிப்பற்ற வர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

Web Editor

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்!

Web Editor

மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா

Arivazhagan Chinnasamy