இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்துவதாக, பிரிட்டன் அரசு அறிவித்தது. மேலும், விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு பட்டியலில், இந்தியாவை சேர்த்து பிரிட்டன் உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரிட்டனுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள், மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் அனைத்தும், ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம், திருப்பி வழங்கப்படும் எனவும், ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு சேவையாக வாரம் ஒருமுறை டெல்லி மற்றும் மும்பையில் இருந்து, பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் எனவும், இதுகுறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும், எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.







