சீர்காழி பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. அதேபோல் கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் புத்தூர், திருவெண்காடு, திருமுல்லைவாசல் மற்றும் எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அப்பகுதிகளில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்
இதனிடையே சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு அவ்வப்போது மழை பெய்து வருவதால் அறுவடைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் தங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
– கோ. சிவசங்கரன்







