காயம் இயல்பு என்றாலும், அது வேகப்பந்து வீச்சாளர்களின் சாபமாகும். அவர்களின் ஓவ்வொரு நொடி வருத்தத்திலும் ஒருவிதமான மன உழைச்சலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீண்டு வர துடிக்கும் மன தைரியத்தையும் உடைக்கிறது. ஒரு நல்ல கம்பெனியின் பேட்டரி தயாரிக்கப்பட்டது முதல், அறிமுகப்படுத்தபட்ட அந்த நொடியில் இருந்து நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலையில், திடீரென எதாவது ஒரு பிரச்னையால் அதன் சேவை தடைப்பட்டு விட்டால் என்னவாகும்?
இந்த நிலைமை தான், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணிக்கு நிலவுகிறது. அந்த நல்ல கம்பெனி இந்திய அணி என்றால், அதன் பேட்டரி என்பவர் ஜாஸ்பிரித் பும்ரா, ஆம் பேஸ் பேட்டரி எனலாம். தற்போது தீரா காயத்தில் சிக்கித் தவித்து வருகிறார் ஜஸ்பிரித் பும்ரா. இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து விதமான பார்மேட்டிலும், பாரபட்சமில்லாமல் பந்துவீசும் பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு என கேட்கும் சிலருக்கு, இந்த தொகுப்பு தான் பதில் சொல்லும்!
கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில், விண்டீஸ் அணியை புரட்டி எடுத்தது மட்டுமல்லாமல், ஹாட்ரிக் எடுத்த பந்தோடு இந்தியா வந்தார் பும்ரா. முதுகுப் பகுதியில் அசவுகரியத்தின் காரணமாக ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது முதுகில் பிரச்னை இருப்பது மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டது. இதனால் அவர் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் இருந்து முன்னெச்சரிக்கையாக விலகினார். ஆனால் நியூசிலாந்து அணியுடனான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
இதுதான் படத்திற்கு ஓபனிங் சீன் என்பது போல் அவருக்கு பிரச்னை அங்கு இருந்து தான் தொடங்க ஆரமித்தது. 2022 ஜூலை 6 ஆம் நாள், இங்கிலாந்து உடனான ஒத்திவைக்கபட்ட கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரது கேப்டன் பதவி பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் பதவி மற்றும் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் என சிறப்பாக விளையாடி வந்த பும்ராவுக்கு, அதே தொடரில் மூன்றாம் ஒருநாள் போட்டியில் முதுகு வலி ஏற்பட்டதால் விலகினார்.
செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த போது, அது வெறும் எதிர்பார்ப்பாக மட்டுமே இருக்க, அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அக்டோபர் மாதம், ஆஸ்திரேலியா உடனான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பங்கேறு இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார் பும்ரா. ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.
இந்திய அணியில் வேகப்பந்து வீசாளருக்கான தேவை தொடர்ந்து இருந்து வந்த போதும் கூட, பும்ராவின் காயம் நீண்டு கொண்டிருந்த வேலையில் தான், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிவிக்கப்பட்டது. ஒரு வழியாக இந்திய அணியில் பும்ரா அறிவிக்கபட்டுவிட்டார் என செய்தி வெளிவந்த சிறிது நாட்களிலேயே Stress fracture காரணமாக அணியில் இருந்து விளகினார் பும்ரா! இப்படியாக 2022 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதே நேரம் கையோடு, பும்ராவின் காயம் ஓயும் என்று பிசிசிஐ கூட முழு நம்பிக்கையில் இருந்திருக்க கூடும்.
இலங்கை உடனான தொடரில் கட்டாயம் அவர் ஆடுவார் என அறிவிக்கப்பட்ட அதே நேரம், கவுகாத்தி சென்ற இந்திய அணியில் பும்ரா இடம்பெறாமல், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார் பும்ரா. சந்தேகத்திற்கு ஏற்றார் போலவே அவர் இலங்கை தொடரில் இருந்தும் விலகினார். இருப்பினும் இது ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்ட்ட போது, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆயத்தமாகும் பயிற்சி வீடியோவை வெளியிட்ட பும்ராவை பார்த்த ரசிகர்கள், இந்த முறை கட்டாயம் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் வீடியோ மட்டுமே வெளியிட்ட பும்ரா, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளகினார். தற்போது மீதம் உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து அவர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உண்மையில் பும்ராவுக்கு முதுகு வலி தான, அல்லது வேறு ஏதாவது காரணங்களா என பல பேர் சந்தேகிக்கும் வகையில் அவரது தீராத காயம் பலர் மத்தியில் குழப்பங்களை எழுப்பியுள்ளது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அவருக்கு இது மிகப்பெரிய பின்னடைவை தரும் என்றாலும், இது அவருக்கான ஒரே முடிவாகும். தொடர் காயங்களை தாண்டி, மீண்டு வருவதற்கான முயற்சியில் முதல் முக்கியமானது சரியான முடிவே. எனவே பும்ரா அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக ஜாஸ்பிரித் பும்ரா, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி (இந்தியா தகுதி பெற்றால்) என முக்கிய தொடர்களில் பங்கேற்க மாட்டார் என பிரபல செய்தி ஊடகமான ஈ.எஸ்.பி.என் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் பும்ராவின் இடம் சந்தேகம் எனவும் அறியப்படுகிறது!
சரி பும்ராவின் காயத்திற்கான காரணம் தான் என்ன? ஏன் அவரால் காயத்தில் இருந்து மீள முடியவில்லை?
புதுமை என்றாவது ஒருநாள் பிரச்னைகளை உண்டு பண்ணலாம் என்பது போல, அவரது பிரபலமான பவுலிங் ஆக்ஷனால் தான் அவர் உட்சம் தொட நேர்ந்தது. குறுகிய ரன் – அப்பிலேயே தனது தோள்பட்டை மற்றும் கைகளை அதிக பலத்துடன் வேகமாக செயல்படுத்தி வேகமான மற்றும் விளையாட இயலாத பந்துகளை அவரால் போட இயலும்.
ஆனால் இப்போது அதுதான் அவருக்கு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு பந்துவீச்சாளருக்கு வேகத்தை கொடுக்க முதுகின் தேவை மிகவும் அதிகம். அவ்வாறு இருக்கும் போது அவரது முதுகில் சிறிய அடி பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த பும்ரா, மீண்டும் காயத்தால் தொடர்ந்து அவது பட்டு வருகிறார். எனவே தான் அவருக்கான அறுவை சிகிச்சை தேவை மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
தொடர் காயத்தால் அவரால் மீண்டு வர முடியவில்லை.. இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்து முழுமையான உடல் தகுதியுடன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே, அவரது ரசிகர்களின் மத்தியில் பிரார்தனையாக உள்ளது. பும்ராவின் வருகைக்காக காத்திருப்போம்!
நந்தா நாகராஜன் மற்றும் சிவபாலன்







