கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிமக திருவிழாவின் நான்காம் நாளில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், மாசி மாதத்தில் நடைபெறும் மாசிமக விழா இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நான்காம் நாளில், அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படிக்கவும் : கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்
ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் தேரோட்டம் நடைபெறும் வீதியில், இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
– கு. பாலமுருகன்







