நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் தொழில் வளர்ச்சித்துறை சார்பாக சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக 16 இடங்களில் சிப்காட் எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டு நிலம் கையகபடுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்திலேயே இங்கு தான் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் பயிரடப்பட்டு வருகின்றன. ஆனால் அதிகாரிகள் விவசாயம் அதிகளவில் நடைபெற கூடிய பகுதிகளான வளையப்பட்டு, பரளி, லத்துப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்காக தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தபட்டால் ஏராளமான விவசாய நிலங்கள் பறி போகும் அபாயம் உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். இப்பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிட்டு விட்டு மாவட்டத்தின் வேறு பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும்.
இல்லையெனில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றினைத்து மிகப்பெரும் அளவில் போரட்டத்தை முன்னெடுப்பொம் எனக்கூறி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நாமக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி ஸ்ரேயா.பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.