உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ’மகளிர் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் சென்னையில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர் நல ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு சுந்தர் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசியதாவது : மார்ச் 8 மட்டும் உலக மகிளிர் தினம் கொண்டாடுகிறோம். எல்லா நாளும் மகிளிர் தினம் கொண்டாட பட வேண்டும். நமக்கு மாற்றத்தை கொடுத்த பெண்களை பற்றி நமது குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு கிடைத்த இந்த சுதந்தரம் நேற்று கிடைத்தது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பாக போராடிய வீரர்கள், பெண்கள் என பலரது தியாகத்தின் காரணமாக கிடைத்த சுதந்திரம் இது.
கடந்த 8 வருடங்களாக பெண்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் கூறுவதால் ஏற்படும் அநீதியை மோடி தடுத்துள்ளார்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பிரதமர் செயலாற்றி வருகிறார்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. நம் நாட்டில் மட்டும் உயரவில்லை. இதற்கு முன்னாடி விலை உயற்வு ஏற்படவில்லையா? எல்லாவற்றிலும் அரசியல் செய்ய நினைக்கும் கட்சி ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிறது. பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதாக சொன்னார்கள் கொடுத்தர்களா பெண்கள் இலவச பேருந்து பயணத்தை குறித்து அவர்களது அமைச்சரே ஓசியில் செல்கிறார்கள் என தவறாக பேசுகிறார். எல்லாவற்றிலும் அரசியல் செய்ய ஒரு எல்லை உண்டு.
அண்மைச் செய்தி : மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களில் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். அது எங்களுடைய பொறுப்பு. இடைத்தேர்தலில் எப்போது ஆளுங்கட்சி தான் வெற்றி பெறுகிறார்கள், வெற்றி தோல்வி எல்லோருக்கும் மாறி மாறி கிடைக்கும்.
பெண்கள் சுதந்திரமாக பேசுவதே முன்னேற்றம். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. தங்களது சுயத்தை இழக்காமல் சுதந்தரமாக தேவையானவற்றை பெண்களே முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.








