ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல-சசிகலா

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்தார். திருத்தணியில் சசிகலா செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஒற்றை தலைமை என்பது தொண்டர்கள் எடுக்கும் முடிவு.…

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்தார்.

திருத்தணியில் சசிகலா செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:
ஒற்றை தலைமை என்பது தொண்டர்கள் எடுக்கும் முடிவு. கழக உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. தனிப்பட்டவர் ஒருவர் எடுக்கும் முடிவு அல்ல. இதுவரைக்கும் தொண்டர்கள் யாரும் இரட்டை இலை சின்னம் பொறித்த கொடியை என்னுடைய காரில் கட்ட வேண்டாம் என சொல்லவில்லை. பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய காரில் கொடியைக் கட்ட எனக்கு உரிமை உண்டு.

அதிமுக எங்கள் தலைவருடைய சட்டதிட்ட விதிகள் படி தொண்டர்கள் எடுக்கும்
முடிவு படியே நடைபெறும். நான் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கவில்லை. நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சுற்றுப்பயணம் தொடர்ச்சியக சென்று கொண்டு
வருகிறேன். ஓபிஎஸ் சுற்றுப் பயணம் போவதற்கும் நான் செல்வதற்கும் எந்த ஒரு காரணமும் இல்லை.

அதிமுகவில் பிளவு ஏற்படுவதற்கு காரணம் திமுகதான். அதிமுக 3 பிளவாக இருந்தால் அது
திமுகவுக்கு தான் பலன் அளிக்கும். திமுக ஆட்சி தற்போது தமிழகத்தில் 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு அம்மாவுடைய ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி நடைபெறும். ஏழைகளின் ஆட்சி நடைபெறும் என்று சசிகலா தெரிவித்தார்.

ஒற்றைத் தலைமை கோரிக்கையால் அதிகமுவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.